திருப்பதியில் 5 மணி நேர தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

திருப்பதியில் வருகிற 17-ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால், இன்றைய தினம் திருப்பதி கோயிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

கஸ்தூரி மஞ்சள், கிச்சலிக்கட்டை, திரிசூணம் உட்பட பல்வேறு மூலிகைகளால் தயார் செய்யப்பட்டு, கலவை கோயில் சுவற்றில் தெளிக்கப்பட்டது.

பின்னர் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More News >>