சட்டத்துக்குப் புறம்பாக கூடுதல் கட்டடம்: சல்மான் கானுக்கு நோட்டீஸ்

மஹாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நகரம் தான் பான்வல். இந்நகரில் சொந்தமாக நிலம் வைத்துள்ள ஒருவரின் புகாரின் அடிப்படையில் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கான் மீது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டப்படி பான்வல் பண்ணை வீடு ‘அர்பித்தா ஃபார்ம்ஸ்’ என சல்மான் கானின் தங்கையின் பெயரில், நடிகர் சல்மான் கான், அவரது சகோதரிகள் அல்விரா, அர்பிதா மற்றும் சகோதரர்கள் அர்பாஸ், சொஹைல் மற்றும் தாயார் ஹெலன் ஆகியோருக்குச் சொந்தமானதாக உள்ளது.

நோட்டீஸ் காலமான ஏழு நாட்களுக்குள் சல்மான் கான் குடும்பத்தாரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராததால் அடுத்த கட்ட நடவடிக்கையால் ஈடுபட்டுள்ளதால மஹாராஷ்டிரா வனத்துறை அமைச்சர் சுதிர் முன்கந்திவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சலீம் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்டுமானப் பணிகள் சட்டத்துக்கு உட்பட்டு தான் மேற்கொள்ளப்பட்டது. முறையான ஆவணங்களுடனும் சரியான தொகைகள் செலுத்திய பின்னர் தான் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டவிரோதமாக எந்த ஒரு கட்டுமானமும் பண்ணை வீட்டில் நடைபெற வில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

More News >>