4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சிறுவாணி அணை!

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை காரணமாக சிறுவாணி நீர்தேக்கம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிவழிகிறது.

உலகில் மிக சுவையான தூய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்று கோவையில் உள்ள சிறுவாணி. பவானி ஆற்றின் கிளை நதியில் அமைந்துள்ள இந்த நீர்தேக்கம், கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாகும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் எதிரொலியாக, சிறுவாணி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவான 50 அடியை நெருங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நீர்தேக்கத்தின் 3 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் மதியழகன் மற்றும் அதிகாரிகள் நீர்தேக்கம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

‘நான்கு ஆண்டுகளுக்கு பிறகு,சிறுவாணி நீர்தேக்கம் நிரம்பி உள்ளது. சிறுவாணி நிரம்பி விட்டதால் கோவையில் ஒன்றரை வருடத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News >>