ரஜினியின் 2.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரஜினி நடிக்கும் 2.0 திரைப்படம் நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சங்கர் படம் என்றாலே குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்ற நிலையில் '2.0' திரைப்படம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. கிராபிக்ஸ் பணியை மேற்கொண்ட நிறுவனங்கள் ஏற்படுத்திய தாமதம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது இதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.

2.0 திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் தங்களது இணையதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் அக்‌ஷய் குமார்,எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளா​ர். நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தில் விஜய்யின் 'சர்கார்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே. ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் ரஜினியின் '2.0' திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாவதால் இந்த ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு டபுள் தீபாவளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது

2.0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More News >>