தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களுக்கு நிமோனியா!
தாய்லாந்து நாட்டு குகைக்கள் சிக்கி மீட்கப்பட்ட சிறுவர்களில் சிலருக்கு நிமோனியா தாக்கியிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
தாய்லாந்து சியாங்ராய் பகுதியில், தாம் லுவாங் குகை உள்ளது. இதனை 12 சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் என மொத்தம் 13 பேர் லுவாங் குகையை பார்வையிடச் சென்றனர்.
அப்போது, இவர்கள் 13 பேரும் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து நடத்திய தேடுதல் பணியின்போது, 9 நாட்களுக்கு பிறகும் அவர்கள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதன்பிறகு, தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டு குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரையும் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது.
இந்நிலையில், சிறுவர்கள் அனைவரும் சுமார் இரண்டு கிலோ வரை எடை குறைந்து காணப்பட்டுள்ளனர். நான்கு சிறுவர்களின் பெற்றோர்கள் மட்டும் அவரவர் குழந்தைகளைக் காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள சிறுவர்களுக்கு நிமோனியா பாதிப்பு உள்ளதால் அவர்கள் கண்காணிப்பில் உள்லனர்.
சரியான உணவும் சூரிய வெளிச்சமும் இல்லாத காரணத்தால் அச்சிறுவர்களுக்கு இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.