பாஜகவுக்கு நகைச்சுவை உணர்வு மிகுதி - கலாய்த்த கனிமொழி

பாஜகவின் நகைச்சுவை உணர்வு அதிகமாகிக் கொண்டே இருப்பதாகக் கூறி திமுக எம்பி கனிமொழி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கனிமொழியிடம், தமிழ் மொழி வளர்ச்சி பற்றி அமித் ஷாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “பாஜகவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகி கொண்டே வருகிறது, அதை நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு தமிழ் மொழியை பற்றியோ கலாச்சாரத்தை பற்றியோ எதுவும் தெரியாது” என விமர்சித்தார்.

“பாஜக கனவு காணும் இந்தி பேசும் இந்துத்துவா இந்தியாவில், தமிழ் கலாச்சாரத்திற்கு எங்கு இடம் இருக்கிறது. பாஜகவின் கைப்பாவையான ஆளும் அரசை துரத்தி அடித்தால் மட்டுமே, தமிழகத்திற்கு விடிவுகாலம்” எனக் கனிமொழி கூறினார்.

பாஜக கலாய்த்த கனிமொழி பேச்சுக்கு, அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். “தேசிய கட்சி தலைவர்களை கிண்டல், கேலி செய்து மீம்ஸ் போடுகிறது திமுக பிற கட்சிகள் மற்றும் தலைவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்” என அறிவுறுத்தினார்.

மேலும், “தமிழகத்திற்கு வந்த தலைவரை திரும்ப போகச் சொல்வதாக விருந்தோம்பல்...?.தரம் தாழ்ந்த அரசியலில் பாஜக ஒரு போதும் ஈடுபடாது” என்று தமிழிசை கூறினார்.

More News >>