4 ஆண்டுகளுக்கு பிறகு 2வது இடத்திற்கு இறங்கி முன்னேறிய இந்தியா !

அதிக ஏழைகள் வாழும் நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்த இந்தியா தற்போது 2வது இடத்திற்கு இறங்கி முன்னேறி உள்ளது.

அமெரிக்காவின் புரூகிங்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் ஒன்று அதிக ஏழைகள் வாழும் நாடுகள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா முதலிடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில், நடப்பு ஆய்வில் இந்தியா ஒரு படி முன்னேறி 2வது இடத்திற்கு வந்துள்ளது. மேலும், அதிக ஏழை வாழும் நாடுகள் பட்டியலில் நைஜீரியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த திங்களன்று நிலவரப்படி, நைஜீரியாவில் 8.70 கோடி பேரும், தொடர்ந்து இந்தியாவில் 7.06 கோடி பேரும் ஏழைகளாக உள்ளதாக ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர். மேலும், நைஜீரியாவில் நிமிடத்திற்கு 6 பேர் அதிகபட்ச ஏழ்மைக்கு தள்ளப்படுவதாகவும், இந்தியாவில் நிமிடத்திற்கு 44 பேர் ஏழ்மையில் இருந்து மீளுவதாகவும் தெரியவந்துள்ளது.

More News >>