ஆதார் திட்டத்தை விரைவாக அமல்படுத்திய மாநிலங்களுக்கு சிறப்பு விருது

ஆதார் திட்டத்தை விரைவாக அமல்படுத்தி முதல் மூன்று இடங்களை பிடித்த மாநிலங்களுக்கு ஆதார் நிறுவனம் விருதுகள் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பத்து ஆண்டுகால ஆட்சியில் இருந்த காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது பாஜக. பிரதமராக பதவி ஏற்ற மோடி பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினார். அதில், ஒன்று ஆதார் என்ற தனித்தனி அடையாள எண் கொண்ட அட்டை. நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு 12 இலக்கு எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களிடம் விரைவாக ஆதார் அட்டை திட்டத்தை கொண்டு சேர்த்த முதல் மூன்று மாநிலங்களுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆதார் தகவல்களை விரைவாக பதிவு செய்ததற்காக முதல் மூன்று இடங்களை பஞ்சாப், பீகார் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

தொடர்ந்து, ஆதார் அட்டைகளை மிக விரைவாக தபால் மூலம் மக்களிடம் சேர்த்த மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. இந்த மாநிலங்களுக்கு ஆதார் நிறுவனம் சார்பில் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>