உலகக் கோப்பை கால்பந்து: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது குரோஷியா

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில், லீக், நாக் அவுட் சுற்றுகள், காலிறுதி சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது அரையிறுதி சுற்றுகள் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி சுற்றின் முடிவில் பிரான்ஸ் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

தொடர்ந்து, இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று இரவு 11.30 மணிக்கு இங்கிலாந்து மற்றும் குரோஷியா நாடுகளுக்கு இடையே நடைபெற்றது.

போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்தார். இதன் பிறகு இரு அணிகளும் முதல் பாதியில் கோல் அடிக்கவில்லை. இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் போராடி 68வது நிமிடத்தில் கோல் அடித்தனர். இதனால், இரு அணிகளும் 1-1 என சமனிலையில் இருந்தன.

இதன்பிறகு அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர், இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

More News >>