முல்லை பெரியாறு, கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு!

முல்லைபெரியாறு அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை வலுபெற்றதை அடுத்து, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைபெரியாறு, கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைபெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 256 கன அடி தண்ணீர், தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் காவிரி நீரின் அளவு, விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு, படிப்படியாக உயர்ந்து வருகிறது. எனவே, டெல்டா பாசனத்திற்கு, விரைவில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More News >>