மோடி பெயர் கின்னசுக்கு பரிந்துரை: காங்கிரஸ் செய்த குசும்பு வேலை

வெளிநாடுகளுக்கு அதிகம் பயணித்த பிரதமர் மோடியின் பெயரை கின்னஸில் இடம்பெற காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது.

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு பல நாடுகளுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில், மோடி 52 நாடுகளுக்கு சென்றுள்ளார் எனவும் இதற்காக 355 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் சமீபத்தில் தெரியவந்தது.

இந்நிலையில், அதிகமான வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்று அவரது பெயர் கின்னஸில் இடம்பெற விரும்பி காங்கிரஸ் கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

இதுகுறித்து கோவா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் கூறுகையில், “பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றுள்ளார். அதிக நாடுகளுக்கு சென்ற பிரதமர் என்பதால் அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற பரிந்துரைத்து கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம்” என்றார்.

More News >>