டிஎன்பிஎல்: 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் வெற்றி
தமிழ்நாடு பிரீமியர் லீக் 3வது சீசனின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கள் டிராகன்னை வீழ்த்தி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பரீமியர் லீக்கின் 3வது சீசன் நேற்று முதல் தொடங்கியது. இதன் முதல் ஆட்டம் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் இடையே நடைபெற்றது. முதலில் திண்டுக்கல் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஜெகதீசன், ஷரி நிசாந்த் களமிறங்கினர்.
ஜெகதீசன் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஹரி நிஷாந்த் 41 ரன்களும், ரோகித் 46 ரன்களும், அனிருத் 8 ரன்கள், கேட்பன் அஷ்வின் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை திண்டுக்கல் அணி எடுத்தது.
இதனால், 173 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. இதில், பாரத் சங்கர், பாபா இந்திரஜித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், இந்திரஜித் 14 ரன்களும், அரவிந்து 19, கணபதி 5, மணி பாரதி 3 ரன்னிலும் அவுட்டாகினர், பாரத் சங்கர் 39 ரன்னில் அவுட்டாகினார். ஆனால், செல்வம் சுரேஷ் குமார் பொறுப்பாக விளையாடி அரை இறுதி வரை போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதனால், இறுதியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பில் 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.