விம்பிள்டன் டென்னிஸ்- காலிறுதியிலேயே வெளியேறிய ஃபெடரர்!

விம்பிள்டன் 2018 டென்னிஸ் போட்டிகளில் நடப்பு சாம்பியன் ரோஜர் ஃபெடரர் கால் இறுதி போட்டியிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார்.

விம்பிள்டன் 2018 ஆம் ஆண்டுக்கான காலிறுதிப் போட்டியில் தற்போதைய சாம்பியனான ஃபெடரர், தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். உலக டென்னிஸ் தரவரிசையில் 8 வது இடத்தில் இருக்கும் ஆண்டர்சனை, ஃபெடரர் கண்டிப்பாக வீழ்த்தி தொடர்ந்து 5 வது முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆண்டர்சனிடம், ஃபெரடரர் 2-6, 6-7 (5/7), 7-5, 6-4, 13-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், காலிறுதியுடன் இந்த ஆண்டு விம்பிள்டனுக்கு பை-பை சொல்லியுள்ளார் ஃபெடரர். இந்தப் போட்டி 4 மணி நேரம் 13 நிமிடங்கள் நீண்டது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஆண்டர்சன் இந்தப் போட்டியில் வெற்றி கண்டிருந்தாலும், ஃபெடரர் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கவில்லை.

இதனால், மிகச் சிறப்பான ஒரு டென்னிஸ் போட்டியாக இது அமைந்தது. ஃபெடரர் 20 முறை கிராண்டு ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி குறித்து ஆண்டர்சன், ‘விம்பிள்டனில் ஃபெடரரை வீழ்த்தியதை நான் வெகு நாளுக்கு நினைவில் வைத்திருப்பேன். இன்று களத்தில் இறங்கியது முதல், ‘இது என்னுடைய நாள்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்" எனக் கூறியுள்ளார்.

More News >>