பெண்கள் பொருளாதார வலிமையுடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி
"பெண்கள் மிகச்சிறந்த பொருளாதார வலிமை உடன் திகழ்வது தான் ஒரு சமூகத்துக்கும் ஒரு நாட்டுக்கும் மிகச் சிறந்த அரண் ஆக இருக்க முடியும்" என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி, இன்று கானொளிக் காட்சி மூலம் பெண்கள் சுய உதவிக் குழுக்களிடம் பேசினார். அவர் பேசுகையில், "நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்களுடன் கலந்துரையாடுவது பெருமை அளிக்கிறது. சத்திஷ்கரில் 22 மாவட்டங்களில் 122 சந்தைகள் முற்றிலும் பெண்களால் நடத்தப்படுவது மிகவும் பெருமை வாய்ந்த விஷயம். பெண்களின் பங்களிப்பின்றி விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
நிதி சுதந்திரமானது, பெண்களை உறுதியானவர்களாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் உருவாக்குகிறது. நிதி அதிகாரம்மிக்க பெண்கள், சமூக தீமைகளுக்கு எதிரான அரணாகத் திகழ்கிறார்கள். தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள இரண்டரை லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்" என்றார்.