மீனாட்சி அம்மன் கோவிலில் கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதி

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகளில் சில மாதங்கள் முன்பு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நாடு முழுவதும் கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற  உத்தரவு ஒன்றை பிறப்பித்தது உயர்நீதிமன்றம்.

தீ விபத்தினால் கோவில்களின் புனிதம் கெட்டு விட்டதாகவும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. மேலும் அறநிலையத்துறை சரியாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தன.

கடைகளை மூட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவினை கேட்டதும் கடை உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை ஒன்றை விடுத்தனர். அதில் கடைகளை அகற்றுவதால் எங்கள் வாழ்த்தரம் பாதிக்கப்படும் என்றும், எங்களுக்கு சற்று அவகாசம் வேண்டும் என்றும் கடை உரிமையாளர்கள் சார்பாக நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அதில் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருக்கும் 51 கடைகள் மட்டும் திறந்துகொள்ள அனுமதி வழங்கியது நீதிமன்றம்.

தொடர்ந்து, கடைகளின் வாடகை தொகையை கோவில் நிர்வாகத்திடம் முறையாக வழங்க வேண்டும் என்றும், வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கடைகளை திறந்துகொள்கிறோம் என்ற உறுதிமொழி பத்திரத்தை வழங்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More News >>