இன்றைய சூழலில் தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிடாது- இல.கணேசன்
தமிழகத்தின் தற்போதைய சுழலில் பாஜக தனித்து போட்டியிட முடியாது என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாஜக-வின் தேசிய தலைவர் அமித் ஷா பேச, அதற்கு ஹெச்.ராஜா மொழிபெயர்க்க என தமிழக அரசியலும் தேசிய அரசியலும் பரபரத்தன. இந்நிலையில் தேசிய பாஜக தலைவர் அமித் ஷா பேச்சுக்கு விளக்கமளித்துள்ளார் இல. கனேசன்.
இல. கணேசன் பேசுகையில், “அமித்ஷா பேச்சு மொழிபெயர்ப்பில் சிறு தவறு நடந்திருக்கிறது. மேலும், அவர் தமிழக அரசை ஊழல் அரசு என்றே சொல்லவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகமும் ஊழலில் சிக்கியுள்ளது. இதைத்தான் அமித்ஷா குறிப்பிட்டார்.
மேலும், அடுத்து தமிழகத்தில் வரும் தேர்தல்களில் பாஜக தனித்துப் போட்டி இடாது. தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையால் பாஜக அரசு கூட்டணி அமைத்துத் தான் தேர்தல்களில் போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.