சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள்: காவல் ஆணையர் அறிவிப்பு

சென்னை முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடையும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொலை, கொள்ளை என பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். இதனால், சிசிடிவி கேமராக்கள் பொருத்த காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து, சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், நடைபாதை, உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பின்னர் கூறியதாவது: சென்னை முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். சென்னை மக்கள் ஆர்வமுடன் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.

தங்கள் வீடு மட்டுமின்றி வீடு இருக்கும் தெருவை கண்காணிக்கும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இன்று காவல் நிலையத்தில் காவலர்கள் படிப்பதற்காக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>