மனைவியுடன் வீண் சண்டை: ஆத்திரத்தில் தாயை கொன்று புதைத்த மகன் கைது
மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்த தாயை கொன்று புதைத்து மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே வாளவராயன் குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (57). இவரது மனைவி பூசம் (55). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கலியமூர்த்தியின் தாய் உய்யம்மாள் (80) மகன், மருமகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 மாதமாக திடீரென உய்யமாளை காணவில்லை. மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்று வந்த உய்யமாள் கடந்த இரண்டு மாதங்களாக பெற வரவில்லை என்பதால் இதுகுறித்து கலியமூர்த்தியிடம் கேட்டுள்ளனர். இதற்கு, கலியமூர்த்தி அவர் ஊருக்கு சென்றிருப்பதாக கூறினார்.
ஆனால், 80 வயதான உய்யமாள் தனியாக ஊருக்கு செல்லும் அளவிற்கு அவரது உடல்நிலை இல்லை என்பதால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் இதுகுறித்து ஊர் நாட்டாமையிடம் தெரிவித்தனர்.
இதன் பிறகு, கலியமூர்த்தியிடம் தொடர்ந்து தாய் எங்கே சென்றுள்ளார் என்று கேட்டு வந்துள்ளனர். இதனால், ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் திருநாள் கொண்டச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரனிடம் சரண் அடைந்து, தாயை கொன்றுவிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
வாக்குமூலத்தில், “தனது தாய்க்கு 80 வயது ஆகிவிட்டது. அவரால் அவரது வேலைகளை பார்த்துக் கொள்ள முடியவில்லை. அவர¬ எங்களாலும் கவனிக்க முடியவில்லை. இதற்கிடையே, என் மனைவியும் தாயும் அடிக்கடி சண்¬ போட்டு வந்துள்ளனர். தான் எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் சண்டை நடந்தபோது, என் அம்மாவை பிடித்து கீழே தள்ளிவிட்டேன். இதில் அவர் இறந்துவிட்டார். வெளியில் தெரிந்தால் கொலை குற்றத்தில் சிக்கிவிடுவோம் என்று என்று கருதி பயத்தில் கூறமல் இருந்தேன்.
பின்னர், ஒரு ஆட்டை கொன்று அதனை புதைக்கப்போவதாக ஊர் மக்களை ஏமாற்றி, ஆட்டை புதைக்க தோண்டிய குழியில் ஆட்டுடன் தனது தாயின் உடலையும் போட்டு புதைத்துவிட்டேன். ” என்று கூறினார்.
இதுகுறித்து விஏஓ சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர். மாமியார், மருமகள் சண்டையில் தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.