ஊழல் வழக்கில் மகளுடன் நவாஸ் ஷெரிஃப் கைது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் இன்று காலை அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவர் நவாஸ் ஷெரிஃப். இவர் பதவிக்காலம் முடிந்த பின்னர் இவர் மீது பனாமா பேப்பர்ஸ் ஊழல் தொடர்ந்து பல ஊழல் வழக்குகள் பதியப்பட்டன. மேலும், அளவுக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கிலும் நவாஸ் ஷெரிஃப், அவரது மகன்கள், மகள் ஆகியோர் மீது பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளில் பல முறை ஆஜராகமல் கைது வாரண்ட் வரை பெற்றுள்ளார் நவாஸ். தற்போது லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் நவாஸ் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட உள்ளார். இதற்காக லண்டனில் இருந்து மகள் மரியம் உடன் கிளம்பிய நவாஸ், இன்று காலை பாகிஸ்தான் திரும்பும் வழியில் அபுதாபி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலை 6 மணி அளவில் பாகிஸ்தான் சென்றடைவார் நவாஸ். இதற்காக இன்று பாகிஸ்தான் முழுவதும் இண்டெர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. கலவரங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது என்பதால் நவாஸ் வருகையை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

More News >>