குடும்ப சண்டை.. பிஞ்சுகளின் உயிர் பறிப்பு.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்
மதுரையில், பாலித்தீன் கவரால் முகத்தை மூடி இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.
மதுரையை சேர்ந்த ஓட்டுநர் ராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் ஜீவாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹரிதா, ஹரிகிஷோர்குமார் என இரு குழந்தைகள் இருந்தனர்.
தம்பதி இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையை ராஜா சந்தேகித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜீவா, இரு குழந்தைகளின் கை, கால்களை கட்டிவிட்டு, முகத்தை பாலித்தீன் கவரால் மூடியுள்ளார். இதனால், மூச்சு விட முடியாமல் பிஞ்சு குழந்தைகள் உயிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ராஜாவின் மனைவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மூவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒழுக்கத்தின் நேர்மையை நிரூபிக்க ஜீவா எடுத்த விபரீத முடிவு, அனைவரின் நெஞ்சை பதற வைத்துள்ளது.