விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகும் 96 பட டீஸர் ரிலீஸ்
விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 96 என்ற படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி திரிஷா ஆகியோரின் நடிப்பில் 96 என்ற படம் உருவாகி வருகிறது.
16, 36 மற்றும் 96 வயது என மூன்று கெட்-அப்பில் நடித்து அசத்தி இருக்கிறார் விஜய்சேதுபதி. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கவுள்ளது படக்குழு.
மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ் எஸ்.நந்தகுமார் சார்பில் தயாரான இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் கோவிந்த் மேனன். ஒளிப்பதிவு செய்துள்ளார் சண்முகசுந்தரம். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி என பிரபலங்கள் படத்தில் இணைந்துள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 12ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியிட திட்டமிட்டுட்விட்டர் பதிவில் தெரிவித்தது மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ். அதன்படி, 96 படத்தின் டீஸர் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது..
இதோ 96 படத்தின் டீஸர்..