விண்வெளி சுற்றுலா பயணத்திற்கு ரூ.1.5 கோடி கட்டணம் நிர்ணயம்..!
விண்வெளி சுற்றுலா பயணத்திற்கு தலா ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் புரூ ஆர்ஜின் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்கு டெக்ஸாசில் உள்ள புளூ ஆர்ஜின் நிறுவனம் விண்வெளிக்கு பொது மக்கள் பயணம் செய்யும் வகையில் கேப்சூல் வகை விண்கலத்தை தயார் செய்து வருகிறது. இந்த விண்கலம் 2.4 அடி அகலம், 3.6 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய ஜன்னல்கள் வடிவமைப்புடன் அமைந்துள்ளது.
இந்த விண்கலத்தில் 6 இருக்கைகளுடன் தனித்தனி திரை அமைக்கப்பட்டுள்ளது.மேலும், அவசரக்காலங்களில் பயணிகள் பாராசூட் மூலம் தப்பிக்கும் வகையில் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்கலத்திற்கு நியூ ஷெப்பர்ட் என்று பெயரிடப்பட்டுள்ளன.அடுத்த ஆண்டு முதல் தனது பயணத்தை துவக்கும் இந்த விண்வெளி பயணத்திற்கான கட்டணத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது, இந்திய ரூபாயின் மதிப்புபடி ஒரு நபருக்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் கட்டணம் வசூலிக்கப்படும் என புரூ ஆர்ஜின் நிறுவனம் அறிவித்துள்ளது.