வாய்த் தகராறில் கமல்- தமிழிசை! மாறிமாறிக் கொட்டும் விமர்சனங்கள்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் பாஜக-வின் தமிழகத் தலைவர் தமிழிசையும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சிப்பதும் அதற்கு மற்றவர் பதிலளிப்பதுமாக உள்ளனர்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. நேற்று தலைமையகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தத் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் மூத்த நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேசுகையில், "தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி, கொடியேற்றம் செய்து ஏன் வேஷம் போட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல், "போலி பகுத்தறிவாதி என என்னை விமர்சிக்க தமிழிசைக்குத் தகுதி இல்லை" எனப் பதிலளித்தார். இதற்கு சற்றும் சளைக்காமல் தற்போது தமிழிசை, "தரம் குறையாமல் அரசியல் ரீதியாக விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது" எனக் கூறியுள்ளார்.