தியேட்டர்களில் வெளி உணவுகளைக் கொண்டு வரலாம்!- மஹாராஷ்டிரா சட்டம்

பெரும் மால் திரை அரங்குகள், மல்டிப்ளெக்‌ஸ் திரையரங்குகள் என சினிமா பார்க்கச் செல்வோர் இனி தங்களுக்கான உணவை அவர்கள் விருப்பம் போல் திரைப்படம் பார்க்க எடுத்துச் செல்லலாம் என மஹாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் திரையரங்க நிர்வாகம் மக்களை வெளியில் இருந்து உணவு எடுத்து வருவதைத் தடுக்கக் கூடாது என்றும் மீறினால் தண்டனை விதிக்கப்படும் என்றும் மஹாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நாடு முழுவதுமே, மால் திரை அரங்கங்களில் விற்கப்படும் உணவு பொருட்கள், எம்.ஆர்.பி விலையை விட பன்மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா என்ற அமைப்பு, ‘மல்டிபிளக்ஸ் உணவு பொருட்களின் விலையை அரசு முறைபடுத்த வேண்டும்’ என்று கோரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதற்கு பொது மக்கள் மத்தியிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் ஆதரவு பெருகியதை அடுத்து, மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ‘மகாராஷ்டிரா அரசு, மல்டிபிளக்ஸ்களில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலையே ஏன் முறைபடுத்தக் கூடாது. இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தான் மகராஷ்டிரா அரசின் உணவுத் துறை அமைச்சர் ரவிந்திர சவான், ‘மல்டிபிளக்ஸ் செல்லும் பொது மக்கள் வெளி உணவை எடுத்துச் செல்ல எந்தத் தடையும் விதிக்கப்படக் கூடாது. மக்கள் வெளி உணவு எடுத்து வருவதைத் தடுத்தால், சம்பந்தப்பட்ட மல்டிபிளக்ஸ் நிர்வாகம் தண்டனைக்கு உள்ளாவர்கள்’ என்று எச்சரித்துள்ளார்.

 

More News >>