நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ராமர் கோயில்- அமித்ஷா சபதம்
உத்தர பிரதேச மாநில அயோத்தியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
நேற்று ஐதராபாத்துக்கு சென்றார் அமித்ஷா. அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். பின்னர், பாஜக உறுப்பினர்கள் மத்தியில் அமித்ஷா, ‘2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே அயோத்தியா ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்படும்.
தற்போது அங்கு ராமர் கோயில் கட்ட நிலவி வரும் இடர்பாடுகள் நீக்கப்பட்டு, சுமூகமாக கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்படும். தேர்தல் சீக்கிரமே வர வாய்ப்பில்லை. எனவே, அதற்குள் மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குங்கள்’ என்று பேசியுள்ளார்.
அமித்ஷாவின் இந்தக் கருத்து குறித்து பாஜக தேசிய செயலாளர் பெரலா சேகர்ஜி, ‘தற்போது எடுக்கப்பட்டு நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும் போது, கண்டிப்பாக வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.