ஃபிபா உலகக்கோப்பையில் சிறப்புக் குடை- ட்ரோல் செய்யப்படும் புதின்!

2018 ஃபிபா கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஈடுபட்ட ஒரு விஷயம் உலக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான ஃபிபா கால்பந்து உலக கோப்பைத் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவில் நடந்த உலக கோப்பைத் தொடரில் இந்த முறை சாம்பியனாக மகுடம் சூடியது பிரான்ஸ் அணி. க்ரோஷியா நாட்டு கால்பந்து அணியை, 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் மாஸாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தப் போட்டியை அந்நாட்டு அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் கேம்ரன் மேக்ரன் மற்றும் க்ரோஷியா அதிபர் கொலிந்தா ஆகியோர் நேரில் பார்த்து ரசித்தனர்.

ஆட்டம் முடிந்த பின்னர் மூன்று நாட்டு அதிபர்களும் மைதானத்துக்குச் சென்று வீரர்களை பாராட்டினர். அப்போது ஆடுகளத்தில் அடை மழை பெய்து கொண்டிருந்தது. மேக்ரன் மற்றும் கொலிந்தா எந்த வித அரணும் இல்லாமல் மழையில் நனைந்தபடி வீரர்களைப் பாராட்டினர்.

ஆனால், புதினுக்கு மட்டும் மழையில் நனைவதிலிருந்து தடுக்க ஒரு பெரிய குடை விரிக்கப்பட்டது. மொத்த மைதானத்திலும் புதினுக்கு மட்டும் இப்படி குடை விரிக்கப்பட்டதை நெட்டிசன்கள் கவனித்துவிட்டனர். அது சம்பந்தமாக வெளியான புகைப்படத்தை எடுத்து, ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அந்த ட்ரோல் ட்வீட்டுகள் உலக அளவில் ட்ரெண்டானது.

 

More News >>