மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் தேதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக, மேட்டூர் அணையில் தேவைக்கேற்ற நீர் இருப்பு உள்ளதால், வரும் 19ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.19 அடியாக உள்ளது. இதில், நீர்வரத்து வினாடிக்கு 993.72 கன அடியாகவும், நீர் இருப்பு 51.72 டிஎம்சியாகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் காவிரி படுகையில் உள்ள சுமார் 700 ஏரி, குளங்கள் நிரம்பும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More News >>