ரஜினி மக்கள் மன்றக் கூட்டம்- ஜூலை 18 முதல் அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் ஜூலை 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோப்புப்புகைப்படம்

ஒவ்வொரு மாதமும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மன்ற நிர்வாகிகள் கலந்து ஆலோசிக்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதம் இக்கூட்டம் மாவட்டச் செயலாளர்களுக்கான கூட்டமாக நடைபெற உள்ளது. மேலும் சென்னையில் நடைபெறும் இக்கூட்டம் வருகிற ஜூலை 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் கூட்டத்துக்கு மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் தலைமை வகிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக டெல்லி பயணமாகி உள்ளார் ரஜினிகாந்த்.

More News >>