பிரான்ஸ் வெற்றிக்கு உரிமை கொண்டாடும் கிரண் பேடி!

ரஷ்யாவில் நடந்த உலக கோப்பைத் தொடரில் இந்த முறை சாம்பியனாக மகுடம் சூடியது பிரான்ஸ் அணி. க்ரோஷியா நாட்டு கால்பந்து அணியை, 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் மாஸாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

பிரான்ஸ் நாட்டு அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி  ‘புதுச்சேரி குடிமக்களாகிய நாம் (முன்னாள் பிரஞ்சு காலனி) வெற்றி பெற்றுள்ளோம். வாழ்த்துகள் நண்பர்களே. விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது’ என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார் கிரண் பேடி. ஆனால், ஒவ்வொரு விமர்சனத்துக்கும் விளக்கமளிப்பவர், ‘பிரஞ்சு நாட்டிடமிருந்து தான் புதுச்சேரிக்கு அதன் நீர் மேலாண்மைத் திட்டம் கிடைத்தது. அவர்கள் புதுச்சேரிக்குக் கொடுத்த தொட்டிகள், ஏரிகள், குட்டைகள், கால்வாய் மற்றும் நீரோடைகளுக்காக கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று கூறி வருகிறார்.

More News >>