அதிமுக சார்பில் விரைவில் உயர்மட்டக் குழு!
அதிமுக சார்பில் விரைவில் 11 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என கட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் எம்.பி-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அடுத்து வரும் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்பிக்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என ஆலோசனை தரப்பட்டது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கூடுதலாக அதிமுக சார்பில் விரைவில் 11 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த 11 பேர் குழுதான் வரும் நாட்களில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்று மாலை நடந்த கூட்டத்தில் அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர பங்கெடுத்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.