தொடரும் குழந்தை கடத்தல்காரர்கள் புரளி- ஒருவர் பலி
குழந்தைக் கடத்தல்காரர்கள் என நாடு முழுவதும் தொடரும் வதந்தியால் கர்நாடகாவில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.
ஐதரபாத்திலிருந்து பிடார் பகுதிக்கு மூன்று பேர் கொண்ட நண்பர்கள் குழு ஒன்று சுற்றுலா சென்றுள்ளது. அப்போது, மூவரில் ஒருவர் உள்ளூர் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்துள்ளார். இதை வைத்து, அவர்கள் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு உள்ளூர் மக்கள் தாக்க ஆரம்பித்துள்ளனர்.
காரில் தப்பியோட முயன்ற அவர்கள், நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தனர். அப்போது, உள்ளூர் மக்கள் அவர்களை வெளியில் இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், ஒருவர் உயிரிழந்தார்.
இருவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை விசாரிக்க வந்த போலீஸாரையும் அப்பகுதி மக்கள் தாக்கியுள்ளனர். இதனால் விவகாரம் வீரியம அடைந்துள்ளது.