செல்பி எடுக்க முயன்றபோது நீர்வீழ்ச்சியில் விழுந்து இருவர் பலி
கர்நாடக மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இளைஞர்களின் செல்பி மோகத்தால் உயிர் பலிகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மேகதாது அருவியில் இளைஞர்கள் இரண்டு குளிக்க சென்றுள்ளனர். அங்கு, இவர்கள் அருவியில் நின்றபடி செல்பி எடுக்க முயன்றனர்.
அப்போது, கால் இடறி இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்தார். இவரை காப்பாற்ற சென்ற மற்றொரு இளைஞரும் நீர்வீழ்ச்சியில் விழுந்தார். இருவரும் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் இருவரும் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஷமிர் ரஹ்மான் மற்றும் பவானி சங்கர் ஆகியோர் என்பது தெரியவந்தது.