குடிமகன்களே ஜாக்கிரதை.. பப்ளிக்ல மது குடித்தால் ரூ.2500 அபராதம்

பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2500 அபராதம் விதிக்கப்படும் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் குடிமகன்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மது குடிப்பதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து கவலை இல்லாமல் குடிப்பவர்கள் தான் நம் நாட்டில் பலர். சமூக சிந்தனை, பொறுப்பு இல்லாமல் தான் செய்வது தான் சரி என்று எண்ணுகிறார்கள் குடிமகன்கள். குடிப்பதனால், மற்றவர்களுக்கு தான் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. இதுப்போன்று பொறுப்பில்லாமல் பொது இடங்களில் மது குடிப்பவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை கோவா அரசு எடுத்துள்ளது.

இதுகுறித்து, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறுகையில், “பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் மதுகுடித்தால் அவர்களுக்கு ரூ.2500 அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் ” என்றார்.

More News >>