தமிழகம் முழுக்க அலறிய ரெய்டு- கோடிக்கணக்கில் நகை, பணம் பறிமுதல்!
தமிழகத்தின் முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.கே குழுமத்துக்குச் சொந்தமான பல இடங்களில் நேற்று தமிழகம் முழுவதுமாக அதிரடி வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரித்துறையினரின் சோதனையில் 100 கிலோ தங்கம் மற்றும் 160 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் சென்னையில் 17 இடங்களிலும், அருப்புக்கோட்டையில் 4 இடங்களிலும், வேலூரில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தினர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை நாட்டில் நடந்த ஐ.டி ரெய்டிலேயே இந்தச் சோதனையின் போது தான் அதிக அளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிராவல் பேக்குகளிலும், பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார்களிலும் சொத்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
எஸ்.பி.கே நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வந்ததையடுத்து வருமான வரித் துறை இந்தச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இன்றும் எஸ்.பி.கே நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் இன்றும் ரெய்டு நடக்கும் என்று கூறப்படுகிறது.