செல்வராகவன்- தனுஷ்- யுவன்- சூர்யா கூட்டணி: என்.ஜி.கேயின் ஒற்றுமை
நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் செல்வராகவனின் என்.ஜி.கே. படத்தில் இணைந்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. சூர்யா கதாநாயகனாக நடித்துவரும் இப்படத்தில் ஒரு பாடலை பாடவுள்ளார் நடிகர் தனுஷ்.
ஏற்கனவே யுவன்-தனுஷ் கூட்டணியில் பாடிய பாடல்கள் அனைத்தும் சம்ம ஹிட் அடித்துள்ளது. தற்போது பாடவுள்ள பாடல் ஒரு குத்து பாடலாக இருக்கலாம் என்றும் அது நடிகர் சூர்யாவுக்காக தனுஷ் பாடவுள்ள முதல் பாடல் ஆகும்.
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, இளவரசு என பிரபலங்கள் நடித்து வருகின்றனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி அன்று படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.