சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 17 பேர் மீது சரமாரி தாக்குதல்
சென்னை அயனாவரத்தில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி மீது வன்கொடுமை நடந்த சம்பவம் தொடர்பாக, கைதான 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சரமாரியாக தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை லிப்ட் ஊழியர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார்.
கடந்த ஏழு மாதமாக சிறுமிக்கு இவர்களால் வன்கொடுமை நடந்துள்ளது. இதுதொடர்பாக பெற்றோருக்கு தெரியவந்துள்ளதை அடுத்து, அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இன்று சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் 17 பேரை கடுமையாக தாக்கினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் வரும் 31ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.