தென்கொரியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 5 வீரர்கள் பலி
தென்கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் துறைமுக நகரமான போஹாங் நகரில் கடற்படை தளம் உள்ளது. இங்கு, ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பழுதுபார்பப்தற்காக வந்திருந்தது. பழுது பார்த்து முடிந்த பிறகு, சோதனை ஓட்டம் மற்றும் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.
ஹெலிகாப்டர் சென்ற சில நிமிடங்களில் கீழே விழுந்து மோதி வெடித்தது. இந்த ஹெலிகாப்டரில் சென்ற ராணுவ வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடும் நிலையில் ஒரு வீரர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்பது குறித்து அந்நாட்டு ராணுவ அமைச்சகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.