கமல் கட்சியில் இருந்து விலகிய தாரைதப்பட்டை வில்லன்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வெளியேறி உள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் இருந்து அடுத்த அவதாரமாக அரசியல் களத்தில் இறங்கினார். கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியும், அதன் பெயர் மற்றும் கொடி குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் பிறகு, திரைத்துறையில் இருந்து ஸ்ரீபிரியா, நாசரின் மனைவி, சினேகன் ஆகியோர் கட்சியில் இணைந்தனர். இதுபோல், கட்சியின் முன்னேற்றத்திற்காக பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் பணியாற்றினார்.
ஆனால், சமீபத்தில் கமல் கட்சியில் இருந்து தான் வெளியே வந்துவிட்டதாக ஆர்.கே.சுரேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்போது அவர், “நானும் கமல்ஹாசனும் ஒரே ஊர்காரங்க. அதனால தான் அவர் கூட அரசியல் பயணம் ஆரம்பிச்சேன். ஆனா போக போக இதில் எதுவும் சரியில்லை. அதனால வெளியே வந்துட்டேன். கமலை விட ரஜினி பெட்டர்னு தோணுது ” கூறினார்.
இயக்குனர் பாலாவின் தாரைதப்பட்டை படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.