விளையாட்டு தூதராக ஹிமா தாஸ் நியமனம்: அசாம் முதல்வர் அறிவிப்பு
உலக ஜூனியர் தடகள போட்டியில் வெற்றிப்பெற்ற ஹிமா தாஸை விளையாட்டுத் துறை தூதராக அசாம் மாநில முதல்வர் சர்பனந்தா சோனோவால் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் உலக ஜூனியர் (20 வயதுக்குட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் விளையாடிய இளம் வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் வென்றார். இது அசாமிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமையான தருணமாக உணரப்பட்டது.
இந்நிலையில், அசாம் மாநில முதல்வர் சர்பனந்தா சோனோவால் ஹிமா தாஸின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், ஹிமா தாஸின் வெற்றி பெண்களின் திறனை நிரூபித்துள்ளது என்றும் பெருமிதமாக பேசினார்.
மேலும், ஹிமா தாஸ¨க்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையுடன் மாநிலத்தின் விளையாட்டுத்துறை தூதராகவும் அவர் நியமிக்கப்படுவார் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனால், ஹிமா தாஸின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.