சொத்து வரியை மாற்றியமைக்க எடுத்த நடவடிக்கை... நீதிமன்றம் கேள்வி
சொத்து வரியை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யயுமாறு சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன், சென்னை மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும செயலாளர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் நேரில் ஆஜராயினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டிய சொத்துவரியை நான்கு முறை மாற்றியமைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்று கூறிய நீதிபதிகள், தொடர்ந்து, சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
பின்னர், சென்னை மாநகராட்சி சொத்து வரியை மாற்றியமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.