நிபா வைரஸ் தாக்கி இறந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலை
நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை கேரள அரசு வழங்கியது.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் நிபா என்ற வைரஸ் தாக்கியதில் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த காய்ச்சலால் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லினி என்ற செவிலியர் சிகிச்சை அளித்து வந்தார். அப்போது லினிக்கும் நிபா வைரல் தாக்கியது.
இதில், லினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது கணவர் பக்ரைனில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில், நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலை மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஏற்கனவே கேரள அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, லினியின் கணவர் சஜேஷ்க்கு கோழிக்கோடு மாவட்ட சுகாதார அதிகாரியின் கீழ் பணியாற்றும் கிளர்க் வேலைக்கான பணி ஆணையை அம்மாநில அரசு வழங்கியது. இதுகுறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.