மம்மூட்டி மட்டும் பெண்ணாக இருந்திருந்தால்.. மிஷ்கினின் எரிச்சலூட்டும் பேச்சால் சர்ச்சை
பேரன்பு பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சு நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் ராம் இயக்கி விரைவில் வெளியாக இருக்கும் படம் பேரன்பு. இந்த படம் வெளியாவதற்கு முன்பே சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது.மம்மூட்டி நடித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.அப்போது விழாவில் பேசிய மிஷ்கின், “மம்மூட்டி மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் அவரை பேர செய்திருப்பேன்” என்று கூறினார். மிஷ்கினின் பேச்சு, பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக சிறுமி, பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், மிஷ்கினின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “கற்பழிப்பு என்ற வார்த்தையை சாதாரணமாக பொது மேடையில் பயன்படுத்துவது வேதனையாக இருக்கிறது” என்றார்.
மிஷ்கினின் சர்ச்சை பேச்சுக்கு நெட்டிசன்கள் கொந்தளித்து அவர்களது தாறுமாறான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதில், நடிகர் பிரசன்னாவும் பதிவிட்டிருந்தார், “மிஷ்கின் எனது நண்பராக இருந்தாலும், அவரது பேச்சு அறுவெறுப்பை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.