மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ்: கனாவின் சீக்ரெட்
அருண் ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகும் "கனா" திரைப்படத்தை தயாரித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இப்படம் மகளிர் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள கதையாக வெளிவரும் முதல் திரைப்படம்.
சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்து இருந்தாலும் இது ஒரு புது முயற்சியாக மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க துடிக்கும் ஒரு நடுத்தர வீட்டு பெண்ணின் கதையை அற்புதமாக தயாரித்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.
படத்தை வரும் அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆருத்ரா பிலிம்ஸ் திரையிடல் உரிமையினை கைப்பற்றியுள்ளது.
அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பதிவில், " 'கனா' படப்பிடிப்பு முடிந்தது. எங்களோடு இணைந்து இரவு பகலாக கனா படத்தை உருவாக்க வேலை செய்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டு முக்கிய பிரபலங்களை டேக் செய்துள்ளார்.