சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி ? கேரள அமைச்சர் பதில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்கப்படும் என்று தேவசம் போர்டு சம்மதித்துள்ளதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், வயது வித்தியாசமின்றி பெண்களை அனுதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், கன்வில்கர் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

அப்போது, கேரள அரசு சார்பில் வாதாடிய வக்கில், “சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்று கூறி அரசு சார்பில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், ஆண்களைப் போல் பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்றும், இதனை மறுப்பது சட்டத்திற்கு விரோதமானது என்றும் நீதிபதிகள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன் கூறியதாவது: சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். இருப்பினும், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம். கேரள தேவசம் போர்டு மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு ஓத்துழைப்பு கொடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

More News >>