கைது செய்யப்பட்ட சீமான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

சேலத்தில் 8 வழிச்சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்க சென்ற இடத்தில் கைது செய்யப்பட்டு சீமானை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இதேபோல், சேலம் விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்காக விவசாயிகள் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால், இத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக, விவசாயிகள் பல மாதங்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து கேட்பதற்காக சீமான் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, கூமாங்காடு என்ற இடத்தில் சீமான் மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

இதையடுத்து, சீமான் உள்பட 11 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதில், இரண்டு பேர் ஜாமீனில் வெளியே வந்தனர். மேலும், சீமான் உள்பட 9 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்பிறகு, சீமான் உள்பட 9 பேரையும் சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.

More News >>