பெண்களை அனுமதிக்க முடியாது- சபரிமலை நிர்வாகம் மறுப்பு

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சபரிமைலை கோயினுள் செல்ல பெண்களுக்கு அனுமடியில்லை என்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் நடைமுறை. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கேரளாவில் உள்ள இந்த சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு நீடிக்கும் தடைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்த வழக்கை 5 பேர் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. நீதிமன்ற அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நாரிமன், கன்வாலிகர், சந்திராசுத், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘அனைத்து பெண்களும் கடவுளின் படைப்பு தான். பின்னர் ஏன் அவர்களை மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும். சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்கள் உட்பட அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக எந்த வித தடையும் இருக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டது.

இதையடுத்து மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் சிபிஎம் கட்சி, தீர்ப்பை வரவேற்றுள்ளது. கேரளாவின் அமைச்சர் கே.சுரேந்திரன், ‘கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான சபரிமலையில் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று கூறி நீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆனால், வழக்கத்தின் அடிப்படையில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என சபரிமலை கோயில் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

More News >>