ஆளுநர் ஆய்வை கைவிட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

ஆளுநர் தொடர்ந்து நடத்தும் ஆய்வை கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடுச்சூரன்குடியில் அண்மையில் போலீஸ் காவலில் மர்ம மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்பவர்களை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் தனிநபர்களால் தீர்மானிக்க முடியாது; மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆர்.கே.நகரில் தொடரும் பணப்பட்டுவாடா புகாருக்காக தேர்தலை ரத்து செய்யாமல் பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். ஆனால், அதற்கு மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. ஆளுநர் தொடர்ந்து நடத்தும் ஆய்வை கைவிட வேண்டும்" என்றார்.

More News >>