புதிய 100 ரூபாய் நோட்டுகள்!- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

விரைவில் புது 100 ரூபாய் தாள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் பணம் மதிப்பிழக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிதாக 2000 ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய் தாள்கள் பல புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அடுத்த சில நாள்களுக்குப் பின்னர் புதிய வண்ணங்களில் 50 ரூபாய், 10 ரூபாய் தாள்கள் மக்கள் புழக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து தற்போது ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் தாள் மத்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்தப் புதிய 100 ரூபாய் தாள் விரைவில் மக்கள் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படும் என்றும் பழைய 100 ரூபாய் தாளும் புழக்கத்திலேயே இருக்கும் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

More News >>