ஐடி ரெய்டு தொடர்பாக கட்சி மீது குறை கூறுவது தவறு- ஓபிஎஸ்

தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரி சோதனை தொடர்பாக ஒரு குறிப்பிட்ட கட்சி மீது குறை கூறுவது கூடாது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.கே குழுமம் மீது தமிழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த சோதனையில் 100 கிலோ தங்கம் மற்றும் 170 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் நடந்த ஐ.டி ரெய்டுகளிலேயே இதில் தான் அதிக அளவிலான பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எஸ்பிகே நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை மற்றும் மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

எஸ்பிகே நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் வெறும் 24 லட்ச ரூபாய் தான் பதுக்கப்பட்டிருந்ததாகவும், மற்ற எல்லா தொகையும் 10 வெவ்வேறு இடங்களில் வாகனங்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக தமிழக முதல்வரும் இதர சில அமைச்சர்களும் தொடர்ந்து இந்த வருமான வரிச் சோதனைக்கும் முதல்வருக்கும் எந்தத் தொடர்புப் இல்லை என மீண்டும் மீண்டும் எடுத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை வரி ஏய்ப்பு தொடர்பாகதான் நடக்கிறது. வருமான வரி சோதனை தொடர்பாக குறிப்பிட்ட கட்சி மீது குறை சொல்வது தவறு. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டெண்டர்களை எடுத்து பணி செய்பவர்கள் செய்து கொண்டு தான் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

More News >>