தொடரும் வாக்குவாதம்: தகராறில் கிரண் பேடி- நாராயணசாமி

புதுச்சேரியில், அரசுக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் நிலவிவருகிறது.

எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி கருத்து தெரிவித்திருந்தார் அது குறித்து இன்று மீண்டும் பேசிய புதுச்சேரி முதலமைச்சர், உச்ச நீதிமன்றத்தின் தீர்புக்குப் பிறகும், புதுச்சேரி அதிகாரிகளிடம் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

புதுச்சேரி மனவேலி தொகுதியில் உள்ள தவளகுப்பம் கிராமத்தில் இருக்கும் பள்ளிக்குத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பார்வையிட சென்றுள்ளார். இது குறித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் கமகலகண்ணன் அவர்களிடமும், என்னிடமும் எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை என்று மனவாலி தொகுதி எம்.எல்.ஏ ஆனந்தராமன தெரிவித்தார்.

பள்ளியை பார்வையிட சென்ற ஆளுநருடன் புதுவை கல்வி துறை இயக்குநர், கல்வி துறை செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர் என்று தெரிவித்தார். இதையடுத்து கருத்து தெரிவித்த நாராயணசாமி, ‘அதிகாரிகளின் செயல்பாடுகள் அனைத்தும் அரசுக்கு தெரியபடுத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்புக்குப் பிறகும், புதுச்சேரி அதிகாரிகளின் நடவடிக்கைகளின் எந்த மாற்றமும் இல்லை’ என்று கடுகடுத்துள்ளார்.

More News >>